News December 4, 2024
இந்தியாவில் நடக்கும் போட்டி… பாக்., பங்கேற்குமா?

பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2025இல் இந்தியாவில் நடைபெறுகிறது. முல்தானில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இப்போட்டியில் பாக்., அணி கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் அந்நாடு பங்கேற்கும் போட்டிகளை நேபாளம் (அ) இலங்கையில் நடத்தக்கூடும் எனத் தெரிகிறது.
Similar News
News December 27, 2025
இந்தியாவில் போலி ரேபிஸ் தடுப்பூசியா?

இந்தியாவில் ரேபிஸ் நோய்த் தடுப்புக்காக ‘Abhayrab’ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் போலி தொகுப்புகள் புழக்கத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 2023, நவ.1-ம் தேதி முதல் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், ஆஸி.,-யில் பதிவு செய்யப்பட்ட மாற்று தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
News December 27, 2025
முக்கிய ஆலோசனையில் காங்., காரிய கமிட்டி (PHOTOS)

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ராகுல், சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் சசி தாரூரும் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் நேஷனல் ஹெரால்டு வழக்கு, ஆரவல்லி பகுதி பிரச்னைகள், MGNREGA திட்டத்தில் மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
News December 27, 2025
வங்கி கணக்கில் ₹3,000.. வந்தாச்சு HAPPY NEWS

PM KISAN திட்டத்தில், நலிவடைந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கி வருகிறது. இதனை உயர்த்தி வழங்குமாறு விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், PM KISAN திட்ட தவணை தொகையை ₹3,000-ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு இருப்பதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.


