News March 27, 2024
இரட்டை இலை சின்னத்தில் போட்டி

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிவி சின்னத்தில் போட்டியிட விரும்பிய நிலையில், அந்த சின்னம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
Similar News
News November 27, 2025
கார் vs கர்சீப்: ஸ்டாலின் – EPS கடும் மோதல்

நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கைக்காக PM-ஐ சந்திக்கிறேன் என EPS கூறினால், அரசு சார்பில் தானே வியர்க்காத அளவு நல்ல கார் ஏற்பாடு செய்து தருகிறேன் என CM ஸ்டாலின் சாடியிருந்தார். இந்நிலையில், ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையை துடைக்க கர்சீப்பை கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்ததையெல்லாம் மறந்துவிட்டீர்களா என EPS விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 27, 2025
Sports 360°: இன்று WPL வீராங்கனைகள் ஏலம்

*சுல்தான் அஸ்லான்ஷா ஹாக்கி தொடரில், இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்றது. * WPL வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. *சையத் முஷ்டாக் அலி தொடரில், தமிழகத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது. *Under-17 ஆசிய கோப்பை குவாலிஃபையர்ஸில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. *டி-20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் சிக்கந்தர் ராஸா முதலிடம் பிடித்துள்ளார்.
News November 27, 2025
கேரள வாக்குச்சீட்டுகளில் தமிழ்

டிச.9, 11 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மொழி சிறுபான்மையினர் வசிக்கும் வார்டுகளில், வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பதற்கான அடையாள சீட்டுகளிலும், வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், கன்னடத்தில் இருக்கும் என ECI அறிவித்துள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் தமிழ் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


