News May 25, 2024

அதிமுகவில் ஜெயக்குமார், உதயகுமார் இடையே போட்டி?

image

ஜெயலலிதாவை இந்துமதத் தலைவர் என்று அண்ணாமலை கூறியதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நேரத்தில், ஆர்பி உதயகுமாரும் கண்டனம் தெரிவித்து பேட்டியளித்தார். அதிமுகவில் ஜெயக்குமார் ஓரங்கட்டப்பட்டு, உதயகுமாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் 2 பேரும் ஒரேநேரத்தில் அறிக்கை, பேட்டியில் கண்டனம் தெரிவித்தது, போட்டி நிலவுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News March 8, 2026

காட்பாடியில் வெல்லப்போவது யார்?

image

நடைபெறவிருக்கும் தேர்தலில் காட்பாடி தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில்,1996 முதல் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் வெற்றி வாகை சூடி வருகிறார். ஆனால்,கடந்த 2021 தேர்தலில் அதிமுக – திமுக இடையேயான கடும் போட்டிக்கு மத்தியில், 776 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே துரைமுருகன் வென்றார். இந்நிலையில் வரும் தேர்தலில் காட்பாடி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

News March 8, 2026

பெண்களின் அட்வைஸை கொஞ்சம் கேளு ப்ரோ!

image

பெண்களின் ஆலோசனையை கேட்கும் ஆண்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் என்று ஆய்வு கூறுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் லாஜிக்குடன், அமைதியாக சிந்திக்கிறார்களாம். அதனால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தங்கள் கண்ணோட்டத்தில் இருந்து அளிக்கும் ஆலோசனையை கேட்டால், அது ஆண்களுக்கு இன்னும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் என ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர். இனி கேளுங்க பாஸ்!

News March 8, 2026

விஜய் – த்ரிஷா.. Bodyguard சொன்ன தகவல்

image

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், விஜய்யுடன் த்ரிஷாவை இணைத்து SM பலரும் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜய்யின் பாதுகாவலர் ஆருண் சுரேஷ், தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில், ‘அனைத்து வதந்திகளையும் தாண்டி எழ வேண்டிய நேரம் இது’ என கில்லி படத்தில் விஜய் – த்ரிஷா இருவரும் நடித்த ‘கொக்கரக்கொக்கர கோ’ பாடலை ஃபையர் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!