News August 26, 2024
பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிறுவனங்கள்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 511 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளுடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. எச்.சி.எல், டெக் பங்குகள் 3%, பஜாஜ் பைனான்ஸ் பங்கு 2.8%, டெக் மகிந்திரா பங்கு 2.5%, JSW ஸ்டீல் பங்கு 2%, டைட்டன் பங்கு 1.7%, எம்&எம், எல்&டி பங்குகள் தலா 1% உயர்ந்துள்ளன.
Similar News
News December 5, 2025
சச்சினின் ரெக்கார்டுகளை நெருங்கும் கோலி & ரூட்!

சச்சின் டெண்டுல்கரின் இரண்டு அசாத்திய சாதனைகள் டேஞ்சரில் உள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சச்சினின் ரெக்கார்டை முறியடிக்க கோலிக்கு இன்னும் 16 சதங்களே தேவைப்படுகின்றன. அதே போல, இங்கிலாந்தின் ஜோ ரூட் இன்னும் 12 சதங்களை விளாசினால், டெஸ்ட்டில் அதிக சதங்கள் (51) அடித்த சச்சினின் ரெக்கார்டை முறியடிப்பார். சரித்திரம் படைக்கப்படுமா?
News December 5, 2025
Business 360°: டீசல் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு

*கடந்த ஏப். முதல் அக். வரை ₹329 கோடிக்கு சீனாவுக்கு இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது *2025-26 நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் GDP 7.4% ஆக உயரும் என அமெரிக்க நிறுவனம் கணிப்பு *கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில் 85.5 லட்சம் டன் டீசல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது *இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை சமநிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என பியூஸ் கோயல் உறுதி
News December 5, 2025
Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

*SUPER CUP கால்பந்து இறுதிப்போட்டிக்கு எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணிகள் முன்னேற்றம் * ILT20-ல் MI எமிரேட்ஸை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது *U-21 டேக்வாண்டோ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் சிங் பிஸ்ட் வெண்கலம் வென்றார் *HCL ஸ்குவாஷ் தொடரின் ஃபைனலில் அனாஹத் சிங்-ஜோஷ்னா சின்னப்பா மோதல் *டி20 போட்டிகளில் சுனில் நரேன் 600-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்


