News March 18, 2024
கொ.ம.தே.க வேட்பாளர் அறிவிப்பு

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். கொமதேக-வின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளரான சூரியமூர்த்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News October 26, 2025
100 வயதிலும் கில்லி.. இவர பாருங்கய்யா

100 வயதில், உலகின் வயதான சுறுசுறுப்பான உடற்கட்டமைப்பாளராக ஆண்ட்ரூ போஸ்டிண்டோ, புதிய தலைமுறையினரை ஊக்குவித்து வருகிறார். தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய சில மாதங்களுக்குப் பின், தேசிய ஜிம் அசோசியேஷன் (NGA) உடலமைப்பு சாம்பியன்ஷிப்பை வென்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது பாடிபில்டிங் போட்டோஸை மேலே பகிரிந்துள்ளோம். பார்த்து கமெண்ட் பண்ணுங்க.
News October 25, 2025
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியது இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்ஸ்டா பிரபலம் ஆதிரை நடையை கட்டியுள்ளார். இந்த வார எவிக்ஷனில் ஆதிரை, அரோரா, துஷார், ரம்யா, கலையரசன், பிரவீன் ராஜ், வியானா நாமினேட் ஆகியிருந்தனர். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்றதால் ஆதிரை எலிமினேட் செய்யப்படுவதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். முன்னதாக சுபிக்ஷா நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்று, எவிக்ஷனில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 25, 2025
ஐஸ்லாந்தில் முதல்முறையாக கொசுக்கள்

குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து நாட்டில், முதல் முறையாக சொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 கொசுக்கள் பிடிக்கப்பட்டன. இந்த கொசுக்கள், நோய்களை பரப்பாத வகை என்றாலும், இது காலநிலை மாற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஐஸ்லாந்தின் பனியுலகில் இது ஒரு புதிய அத்தியாயமாகும். கொசுக்களுக்கு வெப்பநிலை பொதுவாக ~10°C க்கு மேல் தேவை என்பதால், அங்கு கொசுக்கள் இல்லாமல் இருந்து வந்தது.


