News August 27, 2025
இந்தியாவில் மீண்டும் காமன்வெல்த் போட்டி?

2030 காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உரிமை கோருதலுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தியாவின் விண்ணப்பத்தை CommonWealth Games Federation ஏற்றால் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்திட ஒப்பந்தம், நிதி குஜராத்திற்கு வழங்கப்படும். இதில் 72 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள். இதற்கு முன்பாக இந்தியாவில் 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது.
Similar News
News August 27, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு திட்டம்

இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2026 பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதித்துறையிடம் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.
News August 27, 2025
வீரநடை போடும் பி.வி.சிந்து

பாரிஸில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் அவர், மலேசியாவின் கருப்பதேவனை எதிர்கொண்டார். முதலில் 12-18 என பின்தங்கியிருந்த சிந்து, அதன் பிறகு சிறப்பாக ஆடி 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
News August 27, 2025
சண்டை போட்டாலும் சேர்ந்தே பயணித்தாக வேண்டும்: USA

இந்தியா – அமெரிக்கா இடையில் சிக்கலான உறவு நீடிப்பதாக அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெஸண்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இரு நாட்டு தலைவர்களும் நட்புறவை பேணுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் சேர்ந்து பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.