News July 10, 2024
₹3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டிய வணிக வரித்துறை

2024-25ஆம் நிதியாண்டில் முதல் 3 மாதங்களில், தமிழக அரசு வணிக வரித்துறையில் ₹3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரித் துறை நுண்ணறிவுப் பிரிவினரின் சிறப்பு சோதனையில் ₹1,040 கோடி மதிப்பிலான போலி உள்ளீட்டு வரியினை கண்டறிந்துள்ளதாகக் கூறிய அவர், போலியான பில் வழங்கிய 316 பதிவுச் சான்றுகளை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
Similar News
News February 22, 2026
BREAKING: கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது

CPM கட்சியை தொகுதி உடன்பாடு பற்றி பேச பிப்.26-ல் வருமாறு திமுக அழைப்பு விடுத்து அறிவித்துள்ளது. இன்று ஐயுஎம்எல் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திமுக, நாளை (பிப்.23) மதிமுக, மமக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, விசிக, தேமுதிகவுக்கும் அடுத்தடுத்து அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
News February 22, 2026
ட்ரெயின் ட்ராக்கில் இத கவனிச்சிருக்கீங்களா?

டெய்லி நாம் ட்ரெயினில் பயணிக்கும் போது, W/L குறியீடை பார்க்காமல் இறங்க மாட்டோம். இதன் அர்த்தம் தெரியுமா? W/L என்பது, லெவல் கிராசிங்கிற்கான விசில் குறியீடாகும். இது, லெவல் கிராசிங்கிற்கு முன்பு வைக்கப்படும் பலகை. W என்பது விசிலை குறிக்கும். L என்பது லெவல் கிராசிங் என்பதைக் குறிக்கும். லோகோ பைலட் இந்த போர்டில் இருந்து லெவல் கிராசிங்கை கடக்கும் வரை விசிலை ஒலிக்க வேண்டும். SHARE IT.
News February 22, 2026
கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை: டிடிவி தினகரன்

கொலை, பெண்களுக்கெதிரான குற்றங்கள், போதைப் பொருள் என ஒருபக்கமும், அரசு ஊழியர்களின் போராட்டம் ஒருபக்கமும் என இதுவரை கண்டிராத மோசமான நிலைக்கு தமிழகத்தை திமுக அரசு தள்ளியுள்ளதாக TTV தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கொடுங்கோல் ஆட்சி செய்துவரும் திமுகவின் கொட்டம் அடியோடு அடங்கும் நாளை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


