News March 1, 2025

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

image

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹5.50 உயர்ந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹7 குறைக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் மீண்டும் உயர்வை கண்டுள்ளது. GAS விலை உயர்வு குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 1, 2025

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

image

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ராயப்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவச் சேர்க்கையை தொடங்கிய அவர், தனது பிறந்தநாளையும் அங்குள்ள மாணவர்களுடன் கொண்டாடினார். பள்ளிகளில் புதிதாக சேர வந்த மாணவர்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி முதல்வர் குதூகலித்தார்.

News March 1, 2025

முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய பிரதமர் மோடி

image

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் களத்தில் பிரதமரும், முதல்வரும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், முதல்வருக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

News March 1, 2025

ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

image

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <>இணையதளத்தில்<<>> உடனே விண்ணப்பிக்கவும். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.

error: Content is protected !!