News April 22, 2025
வர்ணனை செய்ய தடை? மௌனம் கலைத்த ஹர்ஷா

கொல்கத்தா மைதானம் குறித்து தெரிவித்த கருத்தால், அங்கு நடைபெறும் போட்டிகளில் வர்ணனை செய்ய தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு <<16168983>>ஹர்ஷா போக்லே<<>> மறுப்பு தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் நடக்கும் 2 போட்டிகளுக்கு மட்டுமே தான் வர்ணனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், குடும்ப சூழல் காரணமாக நேற்றைய போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் ஈசி டிப்ஸ்!

வாய்விட்டு சிரிக்கவே முடியாமல், வெறுப்பேற்றும் மஞ்சள் பற்களை வெள்ளையாக்க, இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க ✦பேஸ்டில் கொஞ்சம் பேக்கிங் சோடா கலந்து பிரஷ் செய்யவும் ✦பேஸ்டில் சில துளி எலுமிச்சை சாற்றை கலந்து மெதுவாக பிரஷ் செய்யவும். ஆனால், தினமும் இதனை செய்யக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் ✦இயற்கை கிருமி நாசினியான மஞ்சளை பேஸ்டில் சேர்ப்பதால், சில நாள்களிலேயே மாற்றத்தை பார்க்கலாம். SHARE IT.
News December 2, 2025
சர்ச்சையில் சிக்கினார் விஜய் (PHOTO)

மதுரையில் 100-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையும் விழாவில் விஜய்யும் பங்கேற்றார். ஆனால், நேரில் இல்லை, ‘கட் அவுட்’ வடிவில். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ‘கட் அவுட்’ வடிவில் இருந்த விஜய்தான், புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கியது. இந்த PHOTO வெளியாகி சர்ச்சையான நிலையில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே கட் அவுட் மூலம் அடையாள அட்டை வழங்கியது TVK மட்டுமே என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News December 2, 2025
டிட்வா புயல்.. இலங்கைக்கு தோள் கொடுத்த இந்தியா

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 53 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சாகர்பந்துவின் ஒரு பகுதியாக Chetak, MI-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. பல நாடுகளை சேர்ந்த 150-க்கும் பேரை மீட்க இந்தியா உதவியுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


