News July 1, 2024
திருப்பதி கோயிலில் அக்.4இல் பிரமோற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த நாள்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
குட் பேட் அக்லியில் இளையராஜா பாடல்கள் கட்

இளையராஜா தொடுத்த காப்பிரைட் வழக்கை அடுத்து, Netflix தளத்திலிருந்து ‘குட் பேட் அக்லி’ படம் நீக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் படம் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. அதில், பழைய பாடல்களுக்கு பதிலாக ஜிவியின் புதிய பின்னணி இசை மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘புலி புலி’ பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது சரியாக பொருந்தியுள்ளது என்று சிலரும், பழைய பாடல்களே மொரட்டு வைபாக இருந்தது என்று சிலரும் கூறி வருகின்றனர்.
News September 20, 2025
நான் பேசுவதே 3 நிமிடம் தான்: விஜய்

தனது தேர்தல் பரப்புரைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார். நாகை பரப்புரையில் பேசிய அவர், அங்கே பேசக் கூடாது, இங்கே பேசக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், 5 நிமிடங்கள்தான் பேச வேண்டுமென கூறுவதாகவும், தான் பேசுவதே 3 நிமிடங்கள்தான் என்றும் விஜய் கிண்டலாக கூறினார். விஜய் பரப்புரைக்கான கட்டுப்பாடுகளை எப்படி பார்க்குறீங்க?
News September 20, 2025
திருவாரூர் கருவாடாக காய்கிறது: விஜய்

திருவாரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட விஜய், திமுகவை நேரடியாக தாக்கி பேசினார். திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என கருணாநிதிக்கு திமுகவினர் புகழாரம் சூட்டி வருவதாக குறிப்பிட்ட அவர், நன்றாக ஓட வேண்டிய தமிழகம் எனும் தேரை நாலாப் பக்கமும் கட்டையை போட்டு ஸ்டாலின் நிறுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினார். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் திருவாரூர் கருவாடாக காய்கிறது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.