News March 17, 2025
குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுக்க ஆணை

அனைத்து பள்ளிகளிலும் வரும் 26ம் தேதி பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், Good touch, Bad touch குறித்தும், POCSO சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 17, 2025
பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி கப்பல் வழங்கிய சீனா!

பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் சீனா, தற்போது அந்நாட்டுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தின்படி, இன்னும் 6 நீர்மூழ்கி கப்பல்களை அந்நாட்டுக்கு சீனா வழங்க வேண்டும். இது தவிர, 4 போர்க் கப்பல்களையும் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. அரபிக் கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக பாகிஸ்தானின் கடற்படையை சீனா வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
News March 17, 2025
உரிமைகளை தடுப்பது நியாயமா? – பொங்கிய சரத்!

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அண்ணாமலை, தமிழிசை, H.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, பாஜகவின் சரத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான போராட்ட உரிமைகளை தடுப்பது நியாயமா? என X தளத்தில் கேள்வி எழுப்பி CM ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.
News March 17, 2025
ஓபிஎஸ் கேள்வி.. குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்

சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சேகர்பாபுவிடம், ராஜேந்திரன் எம்எல்ஏ (திருவள்ளூர்), திருவாலங்காடு கோயிலில் மாந்திரீக பூஜை செய்ய வசதி செய்து தரப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், அமைச்சர் இதற்கு விளக்கம் தருவாரா என நகைச்சுவையாக கேட்டார். இதைக்கேட்ட இபிஎஸ் குலுங்கி குலுங்கி சிரித்தார். இதையடுத்து எம்எல்ஏ ராஜேந்திரன், பரிகாரபூஜையையே மாந்திரீக பூஜை எனக் கூறியதாகக் கூறினார்.