News April 13, 2025
வாங்க மரம் நடலாம்! CSK-யை கலாய்க்கும் KKR!!

CSK அணியை இப்போது KKR அணியும் கலாய்த்துள்ளது. KKR-க்கு எதிரான மேட்ச்சில் CSK அணி, மொத்தம் 61 Dot ball-கள் ஆடிய நிலையில், தங்கள் அணி வீரர்கள் மரம் நடுவது போல ஒரு போட்டோவை ரிலீஸ் செய்துள்ளது KKR. அதில், ‘Eco-friendly Knights’ எனவும் கேப்ஷன் இட்டுள்ளது. CSK ரசிகர்கள் எதுவும் செய்யமுடியாமல், வாயை மூடி அழுது வருகின்றனர். CSK இந்த தொடரில் சொதப்ப காரணம் என்ன?
Similar News
News January 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 586 ▶குறள்: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. ▶பொருள்: ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
News January 20, 2026
ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு

ஜப்பானில் பொதுத்தேர்தல் பிப்.8-ல் நடக்கும் என அந்நாட்டு PM சனே டகாய்ச்சி அறிவித்துள்ளார். அதிகரித்த செலவினம், வரி குறைப்பு & ஜப்பானின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக தான் எடுக்கும் முடிவுகளுக்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் கூறியுள்ளார். முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தனது அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு ரிஸ்க் என்ற அவர், ஜன.23-ல் ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


