News March 13, 2025
நிறைமாத நிலவே வா வா..

கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அதை போட்டோஷூட் நடத்தி அவர்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். விதவிதமான போஸ்களில் பெற்றோர் ஆவதை அவர்கள் கொண்டாடியுள்ளனர். பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்த மாதம் இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது. கடந்த 2023 ஜனவரியில் இவர்களுக்கு திருமணம் ஆனது.
Similar News
News March 13, 2025
Manicure பண்றீங்களா? உஷார்..!

Manicure எனப்படும் கைவிரல் நக ஒப்பனையை தொடர்ந்து செய்து வந்த பெண்ணின் விரல்களில், தோல் கேன்சருக்கான செல்கள் உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரல்களில் கோடு போன்று திடீரென உருவானதை கவனித்த அப்பெண், டாக்டரை அணுகியுள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், ‘0 melanoma’ என்ற தொடக்க நிலை தோல் புற்றுநோய்க்கான பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Manicure பண்ற உங்க தோழிகளுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 13, 2025
வார விடுமுறை: 966 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, 966 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 14ஆம் தேதி 270 பஸ்கள், 15ஆம் தேதி 275 பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 20 பஸ்களும் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.
News March 13, 2025
UPI சேவைகள் முடக்கம்: SBI விளக்கம்

நாடு முழுவதும் SBI வங்கியின் <<15739560>>UPI சேவைகள்<<>> முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து விளக்கமளித்த எஸ்பிஐ, UPI பரிவர்த்தனைகளில் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தோல்வியடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், வாடிக்கையாளர்கள் UPI LITEஐ பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.