News November 29, 2024
மீண்டு வாருங்கள், சமந்தா!

நடிகை சமந்தாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சோதனை மேல் சோதனையாகவே உள்ளது. விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம், ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்ட மயோசிடிஸ் பாதிப்பு, அடுத்தடுத்த சர்ச்சைகள் எல்லாமும் அவரை மனம், உடல் ரீதியாக பலவீனப்படுத்தின. எனினும், அவற்றிலிருந்து மீண்டு வந்தவருக்கு, தந்தையின் மரணம் பேரிழப்பாக அமைந்துவிட்டது. மனம் தளர வேண்டாம் சமந்தா! உறுதியாக மீண்டு வாருங்கள்!
Similar News
News April 26, 2025
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்; நீரஜ் சோப்ரா தவிர்ப்பு

மே இறுதியில் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (AFI) 2025 தொடரிலிருந்து ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா விலகியுள்ளார். டைமண்ட் லீக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் நீரஜ் சோப்ரா கிளாஸிக் 2025 போட்டியிலேயே அவர் கவனம் செலுத்தி வருவதால் இம்முடிவை எடுத்துள்ளார். அதேநேரம், 2017 ஆசிய போட்டியில் நீரஜ் தங்கம் வென்றிருந்தார். அதுவே அவரது கடைசி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
News April 26, 2025
மத்தியஸ்தம் செய்யத் தயார்.. ஈரான் அறிவிப்பு

இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களின் சகோதர நாடுகள் எனத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையீது அப்பாஸ் அராச்சி, இரு நாடுகளிடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், துப்பாக்கிச்சூடு என இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் போர் பதற்றம் நிலவுகிறது.
News April 26, 2025
இந்தியா, பாக். துப்பாக்கி சண்டை.. எல்லையில் பதற்றம்

இந்தியா, பாக். ராணுவம் இடையே எல்லையில் 2வது நாளாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை பாக். தீவிரவாதிகள் நடத்தியதாக இந்தியா சந்தேகிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள பாக், எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.