News April 2, 2025
காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி ஆணவக்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வித்யா என்ற கல்லூரி மாணவி வீட்டில் பீரோ விழுந்ததால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காதலன் வெண்மணி அளித்த புகரின் பேரில் மாணவியின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணனே தங்கையை ஆணவக்கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.
Similar News
News December 1, 2025
87 மொபைல் லோன் ஆப்களுக்கு தடை

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளை விட 3-ம் தரப்பு மொபைல் ஆப்கள் மூலம் கடன் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், இதில் பல முறைகேடுகளும் நடக்கின்றன. அந்த வகையில், சட்டவிரோதமாக கடன் வழங்கிய 87 ஆப்களை அரசு தடை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
News December 1, 2025
சமந்தா கல்யாணத்தில் இப்படி ஒரு ஸ்பெஷலா?

நடிகை சமந்தா, தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு ஆகியோரின் திருமணம் ஈஷா மையத்தில் நடைபெற்றது. ‘பூதசுத்தி விவாஹா’ என்ற ஸ்பெஷலான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. லிங்க பைரவி சன்னிதியில் வைத்து பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, தம்பதியர் இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுவதே ‘பூதசுத்தி விவாஹா’ முறை. இது இருவர் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் என ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
நாளை பள்ளிகள் 4 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை(டிச.2) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே <<18440636>>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்<<>> ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புடன் இருங்கள் மக்களே!


