News March 24, 2025
எம்புரான் படத்துக்காக கல்லூரிக்கு விடுமுறை

பக்கா மாஸ் படமான லூசிபரை தொடர்ந்து அதன் 2ம் பாகமான எம்புரான் உருவாக்கப்பட்டது. லூசிபரை போலவே இதிலும் மோகன்லாலை பிரித்விராஜ் கெத்தாக காட்டியுள்ளார். இதனிடையே எம்புரான் ரிலீஸ் ஆகும் மார்ச் 27ஆம் தேதி பெங்களூருவில் கல்லூரி ஒன்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலேஜ்னா இப்படி இருக்கனும்…
Similar News
News December 16, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,320 குறைந்தது

நேற்று(டிச.15) வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம்(₹1,00,120) விலையானது இன்று பெரிய அளவில் குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹165 குறைந்து ₹12,350-க்கும், சவரன் ₹1,320 குறைந்து ₹98,200-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்திருந்த நிலையில், இந்த திடீர் சரிவால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 16, 2025
TVK சின்னம் 15 நிமிடங்களில் உலகப்புகழ் பெறும்: ஆனந்த்

உள்கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வரும் தவெக, தேர்தல் சார்ந்த பணிகளிலும் மும்முரம் காட்டி வருகிறது. இதனிடையே, விசில், பேட், வெற்றி கோப்பை, மோதிரம் போன்ற சின்னங்கள் தவெக பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தவெகவின் சின்னம் பற்றிய தகவல்கள் வெளிவரும் 15 நிமிடங்களில் உலகப்புகழ் பெறும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அப்படி என்ன சின்னமா இருக்கும்?
News December 16, 2025
100 நாள் வேலைத்திட்ட மாற்றம்: திமுக நோட்டீஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, VB-G Ram G திட்டத்துக்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் திமுக MP டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். முன்னதாக, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு சின்னாபின்னமாக்குவதாக <<18573575>>CM ஸ்டாலின்<<>> விமர்சித்திருந்தார்.


