News November 17, 2024

பண்ருட்டி பகுதியில் 20ம் தேதி ஆட்சியர் ஆய்வு

image

பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நவம்பர் 20-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

Similar News

News March 12, 2026

கடலூர்: ரயில் மோதி முதியவர் பலி

image

விருத்தாசலம் அருகில் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 12, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 11, 2026

கடலூர்: 10-ம் வகுப்பு தேர்வில் 407 மாணவர்கள் ஆப்சென்ட்

image

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை மாவட்டத்தில் 33,449 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு 161 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 407 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை எனவும், 33042 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!