News June 22, 2024
பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவு

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் பட்டியலில் இடம்பெறாத இருவரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். இளையராஜா, ஜெயமுருகன் ஆகியோர் மருத்துவனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே இறந்ததால், பிரேத பரிசோதனை செய்யாமலே உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்நிலையில், இருவரின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.
Similar News
News September 16, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆலோசனை!

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று (செப்.,16) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News September 16, 2025
வங்கியில் வேலை, தேர்வு கிடையாது; அப்ளை பண்ணுங்க

SBI வங்கியில் சிறப்பு அதிகாரி, மேலாளர் பதவிகளுக்கு 156 காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு மாத சம்பளமாக ₹85,920-₹1,05,280 வரை வழங்கப்படும். Specialist Officer பதவிக்கு எழுத்து தேர்வு கிடையாது. மேலாளர் பதவிக்கு 28-35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். MBA(Finance), MMS(Finance),CA, CFA முடித்தவர்கள் அக்.2-க்குள் https://sbi.co.in/web/careers/current-openings – ல் விண்ணப்பியுங்கள்.
News September 16, 2025
ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷம்: ஆர்.பி.உதயகுமார்

ஒற்றுமை என்ற பெயரில் செல்லாக்காசுகள் புதிதாக கோஷம் எழுப்புவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். சிலர் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுக விலாசத்தை சிதைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றனர். EPS-க்கு பலவீனத்தை ஏற்படுத்த நினைக்கும் செல்லாக்காசுகளின் திட்டம் ஒருகாலத்திலும் நடக்காது என்றும், சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.