News June 27, 2024
தேவாலய நிர்வாகிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சொந்தக் கட்டடங்களில் இயங்கும் தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விவரங்களை கலெக்டர் அலுவலக 3வது தளத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தை சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகிகள் அணுகி விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
நெல்லை: பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ரெய்டு

நெல்லை, பாளை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பில்டிங் செக்ஷனில் விஜிலென்ஸ் ADSP ராபின் DSP மெக்லரின் எஸ்கால் மற்றும் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தில் செயற் பொறியாளராக இருக்கும் ஜோசப் ரன் ஸ்டண்ட் பிரீஸ் – ஐ பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
News October 17, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கான அக்டோபர் மாத குறைதீர்க்கும் கூட்ட நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும். அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பார்கள். எனவே அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
நெல்லை மாநகர் பகுதியில் மீண்டும் கனமழை

நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இன்று காலையும் பல இடங்களில் மழை நீடித்து நிலையில் இன்று மழை பொழிவு இல்லை. பகல் முழுவதும் மழை ஓய்ந்த நிலையில் நேற்று மாலை வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மற்றும் கொக்கரக்குளம் போன்ற இடங்களில் மீண்டும் பலத்த மழை பெய்துள்ளது.