News April 27, 2024
சிபிஐ கட்சிக்குள் நடக்கும் பனிப்போர்!

சிபிஐ-க்குள் அதிகாரத்தையும் பதவியையும் கைப்பற்றுவதற்கான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் நடக்கவிருக்கும் அக்கட்சியின் மாநில மாநாட்டில், புதிய செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் காரணமாக மாநிலச் செயலாளர் முத்தரசன் & மூத்த தலைவர் சுப்பராயன் ஆகிய இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே உச்சக்கட்ட பனிப்போர் நடப்பதாகக் கூறப்படுகிறது.
Similar News
News January 24, 2026
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத்தொகை ₹1000 பெறும் பெண்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை, எளிய குடும்ப பெண்கள், இதில் ஒன்றை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
News January 24, 2026
அதிமுகவாக மாறிவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா

OPS தரப்பினர் திமுகவில் இணைந்து வரும் நிலையில், ‘திமுக உண்மையான அதிமுகவாக மாறிவிட்டது’ என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். எந்த கட்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கும் கோழி பிடிக்கும் கட்சியாக திமுக மாறிவிட்டதாக சாடிய அவர், 2026 தேர்தலுக்காக எத்தனை கூட்டணிகள் உருவானாலும், விஜய் இல்லாத ஒரு கூட்டணியை மக்கள் ஒருபோதும் தேர்வு செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
அரசியலுடன் மதத்தை இணைப்பது ஆபத்து: மாயாவதி

குறுகிய நலனுக்காக சிலர் அரசியலையும், மதத்தையும் இணைப்பதாக Ex CM மாயாவதி வேதனை தெரிவித்துள்ளார். அண்மை காலமாக அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்த மாயாவதி உத்தரபிரதேச தினத்தையொட்டி தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், UP-ல் நடக்கும், மத விழாக்கள், புனித நீராடல்களில் அண்மை காலமாக அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாக ஆளும் பாஜக அரசை சாடியுள்ளார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


