News August 30, 2025
திமுகவில் பனிப்போர்.. அமைச்சர்களுக்குள் சண்டை?

சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளை நிர்வகிக்கும் விஷயத்தில், அமைச்சர்கள் நேருவுக்கும், சேகர்பாபுவுக்கு மோதல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சரியாக கையாளவில்லை என அதிகாரிகளிடம் நேரு கரார் காட்டியிருக்கிறார். அதற்கு, சேகர்பாபுவை கலந்தாலோசித்த பின்னரே, ஏதும் செய்ய முடியும் என்று பதில் வந்ததால் அமைச்சர்களுக்கு இடையே பனிப்போர் பெரிதாகி வருவதாக பேசப்படுகிறது.
Similar News
News August 30, 2025
இந்த விஷயங்களை செய்தால் உங்களிடமும் பணம் குவியும்

முதலீட்டில் ஜாம்பவானாக அறியப்படுபவர் வாரன் பஃபெட். சிறுவயதிலிருந்தே முதலீடுகளை செய்து பணக்காரர் ஆனவர் இவர். முதலீடுகளை செய்ய தனக்கென சில நிதி கொள்கைகளை வைத்துள்ளார். அதை செய்தால் உங்களிடமும் பணம் கொட்டுமாம். ▶அளவுக்கு அதிக கடன்களை வாங்காதீர்கள் ▶தேவையற்ற செலவுகள் தவிர்க்கவும் ▶சரியான முதலீட்டை தேர்வு செய்வது அவசியம் ▶அவசர கால நிதியை வைத்துக்கொள்ளுங்கள் என வாரன் பஃபெட் கூறுகிறார்.
News August 30, 2025
பள்ளியில் குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி

கர்நாடகாவில் அரசு பள்ளி பாத்ரூமில் 9-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கி படித்துவரும் அந்த மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. ஆனால், கர்ப்பமானதை மறைத்த அவர், பள்ளிக்கு சென்றபோது வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது, இளைஞரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 30, 2025
சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா

ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, படத்தின் போஸ்டர்களில் கூட போட்டோ இருக்காது என்று அவர் கூறியுள்ளார். ‘சந்திரமுகி’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட வெற்றி படங்களில் அவரது போட்டோ போஸ்டர்களில் இடம்பெற்றதை சுட்டிக்காட்டி, வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை மறக்க வேண்டாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.