News April 18, 2025
விஜயநகர பேரரசு கால நாணயம் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயம் விஜயநகர பேரரசின் மன்னரான 2ம் தேவராயர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. நாணயத்தின் முன் பகுதியில் யானை ஓடுவது போலவும், மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ‘கன தனய காரு’ என கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
செப்டம்பர் 14: வரலாற்றில் இன்று

*1948 – ஆபரேஷன் போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய தரைப்படை அவுரங்காபாத் நகரைக் கைப்பற்றியது. *1954 – சோவியத் ஒன்றியம் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டது. *1974 – நடிகை பிரியா ராமன் பிறந்தநாள். *1997 – மத்திய பிரதேசத்தில் ரயில் ஒன்று ஆற்றில் விழுந்து 81 பேர் உயிரிழப்பு. *2005 – விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்தார்.
News September 14, 2025
Cinema Roundup: முருகன் அவதாரம் எடுத்த தனுஷ்

* தினேஷ், கலையரசன் நடிக்கும் தண்டகாரண்யம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. * இட்லி கடை படத்தில் தனுஷின் கதாபாத்திர பெயர் முருகன். * கிஸ் படத்தின் அடுத்த அப்டேட் காலை 11.07 மணிக்கு வெளியாகும் என கவின் தகவல். * படையாண்ட மாவீரா படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. * மிராய் படத்தின் முதல் நாள் வசூல் ₹27.20 கோடி என அறிவிப்பு.
News September 14, 2025
பாகிஸ்தானுடன் ஆடக் கூடாது: உத்தவ் தாக்கரே

ஆசிய கோப்பையில் பாக். உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நம் ராணுவ வீரர்கள் எல்லையில் உயிரை தியாகம் செய்துகொண்டு இருக்கும் நேரத்தில், பாகிஸ்தானுடன் விளையாடுவது அவசியமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். போட்டியை புறக்கணிப்பது, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.