News March 17, 2024
கோவை: சலூன் கடை உரிமையாளரிடம் ரூ.38.50 லட்சம் மோசடி

சிங்காநல்லூரில் சலூன் நடத்தி வரும் ரமேஷ் பழனியப்பனுக்கு கடந்த டிச.மாதம் செல்போனுக்கு வந்த மெசேஜில் தங்களது நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனை நம்பி ரூ.38.50 லட்சத்திற்கு பங்குகளை வாங்கியுள்ளார். பின் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 3, 2025
கோவையில் 2,000 பேருக்கு இலவச பட்டா: ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில், இலவச பட்டா கோரி விண்ணப்பித்த 2,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். மேலும், 1,000 விண்ணப்பதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். விண்ணப்பிக்கும் பொதுமக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News September 2, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (02.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 2, 2025
கோவை: இனி அலைய வேண்டாம்.. ஒரு மெசேஜ் தான்!

கோவை மக்களே, கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். SHARE பண்ணுங்க!