News March 20, 2025
காபி ஏற்றுமதி 40% வரை அதிகரிப்பு

காபி உற்பத்தியில் உலகிலேயே 7ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. உற்பத்தி குறைவு, பழைய ஸ்டாக்குகளை விற்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜனவரி மாதம் காபி கொட்டைகளின் ஏற்றுமதி 10% வரை வீழ்ச்சி கண்டது. தற்போது உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், ஏற்றுமதி 43.37% வரை அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.
News July 7, 2025
தொண்டர்கள் வெள்ளத்தில் இபிஎஸ் ரோடு ஷோ

மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்.. என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ் மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். சுற்றுப்பயணத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News July 7, 2025
26/11 தாக்குதல்: பாக்., தொடர்பு உறுதியானது

26/11 தாக்குதலில் பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் தாக்குதலின் போது, தான் அங்கு இருந்ததையும், இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பாக்.,க்கு நீண்டகாலமாக தொடர்பிருப்பதையும், குறிப்பாக, 26/11 தாக்குதலில் பாக். தொடர்பையும் அவர் உறுதிச் செய்துள்ளார். இந்த விசாரணைக்காக அமெரிக்கா அண்மையில் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.