News June 27, 2024
₹22 கோடி மதிப்புடைய கோக்கைன் பறிமுதல்

நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.2 கிலோ கிராம் கோக்கைன் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ₹2.2 கோடி என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கென்யா நாட்டு பெண் ஒருவர் தன்னுடைய ஷூக்களில் இந்த போதைப் பொருட்களை பதுக்கி எடுத்து வந்துள்ளார். விசாரணைக்குப் பின் அப்பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News December 16, 2025
இன்று முதல் திருச்சி-சென்னை AIRBUS சேவை

இன்று முதல் டிச.31 வரை திருச்சி-சென்னை இடையிலான ATR விமான சேவைகளை Indigo ரத்து செய்துள்ளது. 76 இருக்கை வசதி கொண்ட ATR விமான சேவைக்கு பதில், காலை 10:35, மாலை 5:55 என 2 நேரங்களில் AIRBUS இயக்கப்படவுள்ளது. இந்த AIRBUS-ல் அதிகபட்சமாக 180 பேர் பயணிக்க முடியும். கிறிஸ்துமஸ், New Year பண்டிகை கால விடுமுறையை கணக்கிட்டு, பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த தற்காலிக மாற்றத்தை செய்துள்ளதாக Indigo கூறியுள்ளது.
News December 16, 2025
டிச.27-ல் நாதக பொதுக்குழு கூட்டம்

பரபரப்பான தமிழக அரசியல் களத்தில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு என இயங்கி வருகின்றன. ஆனால், ஒரு படி மேலாக சென்ற சீமான், 100 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டிருந்தார். இந்நிலையில், டிச.27-ல் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் அரங்கில் நாதக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
News December 16, 2025
பொங்கல் பரிசு பணம்.. வெளியான முக்கிய தகவல்

2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம்(₹3,000-5,000 வரை) வழங்க, TN அரசு ஆயத்தமாகி வருவதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச்செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்குவதற்கான சாத்தியக்கூறு, நிதி ஆதாரங்களை சேகரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாம். பொங்கல் பரிசு குறித்து ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


