News October 25, 2024
2026இல் கூட்டணி ஆட்சிதான்: தமிழிசை

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இனி தனித்து நின்று வெற்றி பெற முடியாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2026இல் நிச்சயம் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றார். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தாலும் ஆட்சியில் பங்கு கேட்போம் எனவும், திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News January 16, 2026
நாட்டின் வணிக தலைநகரை கைப்பற்றுவது யார்?

மகாராஷ்டிராவில் நேற்று மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணி முதல் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று நடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜக தலைமையிலான <<18868876>>மகாயுதி கூட்டணியே<<>> பெரும்பாலான இடங்களில் வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
News January 16, 2026
மாட்டுப்பொங்கல் கோ பூஜை செய்வது எப்படி?

பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். கோ வழிபாடு மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்று. பசு மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். மாலை அணிவித்து அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். கோபூஜை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும், நீண்ட கால மனக்குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
News January 16, 2026
பொங்கல் பரிசு: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,260) குறைந்து $4,600-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் சுமார் $300 அதிகரித்த தங்கம் இன்று சரிவைக் கண்டுள்ளது. தை பிறந்துள்ளதால், சுப முகூர்த்த விழாவுக்காக நகைகள் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது சற்று நிம்மதியை அளித்துள்ளது. இந்திய சந்தையில் இன்று கணிசமான அளவு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.


