News September 6, 2025
2026-ல் கூட்டணி ஆட்சி: அன்புமணி உறுதி

பாமகவில் இன்னும் அப்பா – மகன் மோதல் முடிவுக்கு வராததால், எந்த கூட்டணியில் அக்கட்சி சேர போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனிடையே, 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் பாமக பங்கு பெறும் எனவும், கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்றும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கட்சி சின்னம் நம்மிடம் உள்ளதால் நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம் என்றார். யாருடன் கூட்டணி செல்வார்?
Similar News
News September 6, 2025
அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக இபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுகவில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க EPS-க்கு, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், திண்டுக்கல்லில் 7 Ex <<17627735>>அமைச்சர்களுடன் EPS ஆலோசனை<<>> நடத்தினார். அந்த கூட்டத்திற்கு பிறகு செங்கோட்டையனை நீக்கி அறிவித்துள்ளார்.
News September 6, 2025
மீண்டும் NDA கூட்டணி.. டிடிவி தினகரன் புதிய ட்விஸ்ட்

AMMK-வை சிறிய கட்சி என BJP நினைத்ததாக குற்றம்சாட்டியுள்ள TTV தினகரன், ஆனாலும் தங்களுக்கான கூட்டணி வாய்ப்பில் NDA முதல் இடத்தில் இருப்பதாக ட்விஸ்ட் வைத்துள்ளார். அதேநேரம், கூட்டணியில் தொடர தாங்கள் தலைமைக்கு வைத்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கண்டிஷனையும் வைத்துள்ளார். முன்னதாக, அதிமுகவில் நிலவும் பிரச்னைகளை அமித்ஷா தீர்த்து வைப்பார் என நினைத்ததாக அவர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News September 6, 2025
BREAKING: செங்கோட்டையன் புதிய அறிவிப்பு

கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாகவே நேற்று பேசியதாக செங்கோட்டையன் சற்றுமுன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதனை அறிந்து பல்லாயிரக் கணக்கானோர் வருகை தந்து, பெரும் ஆதரவு அளித்ததற்கு கோடான கோடி நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையனின் பேச்சு குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக EPS, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.