News November 19, 2024
CNG கேஸ் விலை ₹5 உயருகிறது; கவலையில் வாகன ஓட்டிகள்
சூழல் மாசை குறைக்கும் வகையில் ஆட்டோ, கார்கள் வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இருந்து CNG கேஸுக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், விற்பனையாளர்களுக்கு CNG ஒதுக்கீடு 20% வரை குறைந்ததால், அவர்களுக்கான லாபமும் குறைந்துள்ளது. இதை ஈடுகட்ட CNG விலை கிலோவுக்கு ₹5.50 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது 1 kg CNG ₹90.50க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மேலும் சுமையாக மாறும்.
Similar News
News November 19, 2024
BREAKING: ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்: மனைவி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். வக்கீல் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏ.ஆர்.ரஹ்மானுடனான 29 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார். வாழ்க்கையின் இந்த கடினமான காலகட்டத்தில் பொதுமக்களிடமிருந்து தனியுரிமை, புரிதலை வேண்டுவதாகவும் சைரா பானு தெரிவித்துள்ளார். 1995இல் 2 பேருக்கும் திருமணம் ஆனது. அவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
News November 19, 2024
கோலியை தாக்குங்கள்: AUS முன்னாள் வீரர்
விராட் கோலி ரன் குவிப்பதை தடுக்க அவரது உடலை குறிவைத்து பந்து வீச வேண்டும் என AUS முன்னாள் வீரர் இயான் ஹேலி அட்வைஸ் செய்துள்ளார். கோலியின் சுமாரான ஃபார்மை பயன்படுத்தி அவரது காலை AUS பவுலர்கள் குறிவைக்க வேண்டும் எனவும், அது பலனளிக்காத போது அவரது தோள்பட்டையின் பின்பகுதியை தாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவரது உடலை தாக்குவது 2ஆம் திட்டமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
கோழியா? முட்டையா? முதலில் வந்தது எது தெரியுமா?
முதலில் வந்தது கோழியா? இல்லை முட்டையா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம்! ஜெனிவா பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியலாளர் மரைன் ஆலிவெட்டா தலைமையிலான குழுவினர் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், விலங்குகள் தோன்றுவதற்கு முன்பே கரு போன்ற கட்டமைப்புகள் இருந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி முட்டையே முதலில் வந்தது.