News September 13, 2024
முதல்வரின் USA பயணம் தோல்வி: ராமதாஸ்

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார். 17 நாட்களில் 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது ஒப்பீட்டளவில் மிக குறைவு என்றும், ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை தமிழகத்தில் உருவாக்க அரசு முயற்சிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 460 ▶குறள்: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். ▶பொருள்: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
News September 16, 2025
ASIA CUP: தொடரை விட்டே வெளியேறும் PAK?

கடந்த IND vs PAK போட்டி டாஸின் போது, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டின் தலையீடு அதிகமாக இருந்ததாக ICC-க்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. டாஸின் போது சூர்யா கைகொடுக்க மாட்டார் என தங்கள் கேப்டன் சல்மானிடம் கூறியதாகவும், இது தொடர்பாக இரு கேப்டன்களிடம் தனித்தனியாக அவர் பேசியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதனால் அவரை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என்றும் எச்சரித்துள்ளது.
News September 16, 2025
மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நயினார்

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக பாஜக விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என சொன்னீங்களே, செஞ்சீங்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பல கோடி செலவில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டும் திமுக, 4 ஆண்டுகளாக மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை என விமர்சித்துள்ளார்.