News October 23, 2025
ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடும் CM: அண்ணாமலை

மக்கள் வரிப்பணத்தை CM ஸ்டாலின் விளம்பரங்களுக்கு வீணடித்து கொண்டிருப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என ₹78,000 கோடி செலவிட்டுள்ளதாக அரசு கூறுகிறது; ஆனால் பல கிராமங்களில் இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News October 23, 2025
நாளை காலை முதலே இதை நிறுத்துங்க!

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, டீ குடிப்பதை நிறுத்தினால், ஆழ்ந்த உறக்கம் கிடைக்குமாம். அதுமட்டுமல்ல, பதற்றம், Dehydration பிரச்னைகள் குறையும். செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும், செரிமான பிரச்னை உள்ளிட்டவைகள் சரியாகுமாம். எனவே, நாளை காலையில் இருந்தே இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!
News October 23, 2025
குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பா இது இருக்கணும்

மக்களே, உங்களுக்கோ/உங்கள் வீட்டிலோ 3 வயதுக்கு கீழ் குழந்தைகள் இருக்காங்களா? இவர்கள் கதவை திறந்து மூடும்போது கண்டிப்பாக கை விரல்களை நசுக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால், கைகள் வீங்குவதோடு, சில நேரங்களில் எலும்பு முறிவு கூட ஏற்படலாம். உங்கள் பிஞ்சு குழந்தையின் பிஞ்சு விரல்களை காக்க ஆன்லைனில் கிடைக்கும் Door guard/ Door stopper-ஐ பயன்படுத்தலாம். அனைவருக்கும் யூஸ் ஆகும். SHARE THIS.
News October 23, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது அறிவிப்பு

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு <<18021492>>டிச.15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை<<>> வழங்கப்படும் என DCM உதயநிதி அண்மையில் அறிவித்துள்ளார். இதுவரை, 28 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களது மனுக்கள் மீதான களஆய்வு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மேலும், நவ.15 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. அனைத்து பணிகளும் நவ.30-க்குள் முடிந்து டிசம்பரில் புதிய பயனர்களுக்கு பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளது.