News October 28, 2025
ஜே.பி.நட்டாவுக்கு CM ஸ்டாலின் முக்கிய கடிதம்

TN விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய உரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நடப்பு சம்பா பருவத்தில் பயிர் சாகுபடிக்கான யூரியா, டி.ஏ.பி உரங்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 29, 2025
INDIA கூட்டணியின் பேராசை: நிதிஷ்குமார்

பிஹாரை 15 ஆண்டுகள் கொள்ளையடித்தவர்கள் தற்போது இளைஞர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக INDIA கூட்டணியின் <<18131543>>தேர்தல் வாக்குறுதிகளை<<>> நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். அதிகாரத்தின் மீது பேராசை இருப்பதால் தான், இதுபோன்ற ஏமாற்றும் அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2,500, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை INDIA கூட்டணி அளித்திருந்தது.
News October 29, 2025
பாடும் பறவைகள்

தாளமிடும் இசையின் ஓசையாக ஒளிக்கும் பறவைகளின் கூக்குரல், நமது காதுகளில் கரைந்தோடும் தேனிசை. இயற்கையின் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஆம் பறவைகள் உண்மையிலேயே பாடுகின்றன. பாடும் பறவைகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இதேபோன்று நீங்கள் ரசித்த பாடும் பறவையின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 29, 2025
Sports Roundup: ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் முன்னேற்றம்

*ஷ்ரேயஸ் ஐயர் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல். *புரோ கபடி லீக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் 46-39 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேற்றம். *ஆசிய யூத் கேம்ஸ் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவில், ஆனந்த் தேஷ்முக் வெண்கலம் வென்றார். *அதே போல TT கலப்பு இரட்டையரில் சிண்ட்ரெல்லா தாஸ், சர்தக் ஆர்யா இணைக்கு வெண்கலம் கிடைத்தது.


