News August 20, 2025
CM ஸ்டாலின் முடிவே என் முடிவு: கமல்ஹாசன்

துணை ஜனாதிபதி தேர்தலுக்காக NDA கூட்டணி சார்பில் CPR-யும், இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்த சுதர்சன ரெட்டியும் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த CPR தேர்தலில் போட்டியிடுவதால் தமிழக எம்.பிக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்புள்ளது. இதுபற்றி பேசிய கமல்ஹாசன், துணை ஜனாதிபதி தேர்தலில் CM ஸ்டாலின் முடிவுதான் எனது முடிவு என கூறியுள்ளார்.
Similar News
News August 20, 2025
ஆகஸ்ட் 20: வரலாற்றில் இன்று

*1944 – இந்தியாவின் 6-வது பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்ததினம்.
*1946 – இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய தொழிலதிபர் நாராயணமூர்த்தி பிறந்ததினம்.
*1858 – சார்லஸ் டார்வின் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளியிட்டார்.
*1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
*1977 – நாசா வாயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
*மத நல்லிணக்க தினம் இன்று.
*உலக கொசு தினம் இன்று.
News August 20, 2025
EPS-க்கு எதிராக போலி அறிக்கை : ஆம்புலன்ஸ் சங்கம்

வேலூர் அருகே அணைக்கட்டில் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் வந்ததால் EPS கண்டித்தார். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதலும் நடைபெற்றது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியானது. இந்நிலையில் இந்த அறிக்கை தாங்கள் வெளியிடவில்லை என்றும், சங்க லெட்டர் பேடை அவதூறாக பயன்படுத்தியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
News August 20, 2025
விஜய்யா? பாஜகவா? கூட்டணி யாருடன்: OPS பதில்

விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து யாரும் தன்னை தொடர்புக்கொள்ளவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உங்களை அண்ணன் என அழைத்துள்ளாரே என கேட்டதற்கு, தன்னை அண்ணன் என அழைத்தால் அவர் தனக்கு தம்பி என்றார். பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.


