News August 20, 2025
விரைவில் ஜெர்மனி செல்லும் CM ஸ்டாலின்

ஐரோப்பாவிலும் TN Rising மாநாட்டை நடத்தவுள்ளதால், CM ஸ்டாலின் ஜெர்மனி செல்ல உள்ளார் எனவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் TRB.ராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர், 2024 முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80% வரை அமலுக்கு கொண்டு வந்து திமுக அரசு சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News January 15, 2026
₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் ₹20 லட்சம் தொகையை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.
News January 15, 2026
விபத்தில் 6 பெண்கள் பலி.. பொங்கல் நாளில் சோகம்!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் கார் – லாரி மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகர சங்கராந்தி விழாவுக்கு(வட மாநிலங்களின் பொங்கல்) பதேபூருக்கு சென்றபோது விபத்து நிகழ்ந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
News January 15, 2026
ஜனநாயகத்தை வழி நடத்தும் பெண்கள்: PM மோடி

இந்தியாவின் முக்கியமான தூணாக பெண்கள் மாறிவிட்டதாக காமன்வெல்த் மாநாட்டில்(CSPOC) PM மோடி பேசியுள்ளார். இந்தியாவின் பெண்கள் ஜனநாயகத்தில் பங்கேற்பது மட்டுமல்லாமல் அதை வழிநடத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், நாட்டின் ஜனாதிபதியே ஒரு பெண் தான் என்றார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்த போக்கே இந்திய ஜனநாயகத்தில் பலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


