News September 27, 2025
கரூர் விரையும் CM ஸ்டாலின்

கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான நிலையில், CM ஸ்டாலின் நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதேபோல், சம்பவ இடத்திற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்தார். இந்நிலையில், நாளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவும், ஆறுதல் கூறவும் செல்ல உள்ளார்.
Similar News
News September 28, 2025
தவெக தலைவர்கள் எங்கே?

கரூரில் இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ளது. அரசு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த சூழலில் தவெக தரப்பில் இருந்து யாரும் விளக்கமளிக்கவில்லை. விஜய்யின் பதிலுக்காகவே காத்திருக்க வேண்டியிருக்கிறது. இச்சூழலை எதிர்கொள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவில் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 28, 2025
தேசிய அளவில் #Karur டிரெண்டிங்

கரூர் துயரம் தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 36 பேர் உயிரிழந்த நிலையில், X-ல் #Karur, #TVKCampaign, #Tamil Nadu, #கரூர் ஆகியவை டிரெண்டிங்கில் உள்ளன. இதையடுத்து தேசிய அளவில் மட்டுமின்றி, உலகளவிலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News September 28, 2025
ரத்த தானம் செய்யுங்கள்: தமிழிசை வேண்டுகோள்

கரூர் துயர சம்பவம் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக தமிழிசை, தன் x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், அனைவரும் ரத்த தானம் செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சிகிச்சையில் உள்ளவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.