News March 4, 2025
தமிழிசைக்கு பதிலடி கொடுத்த CM ஸ்டாலின்

பிறந்தநாளுக்கு மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்த தமிழிசைக்கு, தனக்கு தெலுங்கு தெரியாது எனக் கூறி CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தெலங்கானா ஆளுநராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை தமிழிசை அறிந்திருப்பதாக கூறிய அவர், இதிலிருந்தே 3ஆவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்பட்டால் அதனை புரிந்துகொண்டு பயன்படுத்தலாம் என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
Similar News
News March 4, 2025
அறநெறி வளர்த்தவர் அய்யா வைகுண்டர்: அண்ணாமலை

அய்யா வைகுண்டரின் 193ஆவது அவதார தினத்தையொட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவர் அய்யா வைகுண்டர் என குறிப்பிட்டுள்ள அவர், மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, தர்மம் போன்ற அறநெறிகள் வளர்த்தவர் அய்யா வைகுண்டர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News March 4, 2025
20 மனைவிகள், 104 பிள்ளைகள், 144 பேரக்குழந்தைகளா!

இந்த அதிசய மனிதர் டான்ஸானியாவில் வசித்து வருகிறார். 1961ல் முதல் திருமணம் செய்தவரின் பழங்குடியினத்தில் அடுத்தடுத்த திருமணங்களுக்கு தடையில்லை என்பதால், 20 பெண்களை அவர் மணமுடித்துள்ளார். அனைத்து மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில்தான் வாழ்கிறார். 104 வாரிசுகளின் மூலம் அவருக்கு 144 பேரன், பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். இந்த குடும்பமே ஒரு கிராமம் போல, அதன் ராஜாவாக கபிங்கா வாழ்கிறார்.
News March 4, 2025
அமெரிக்கா விதித்த 25% வரி முறை அமலுக்கு வந்தது

கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25% வரி அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், சீனப் பொருட்கள் மீதான 10% வரி விதிப்பும் நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள், போதைப்பொருள் நுழைவதை தடுக்கவும் இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் விளக்கமளித்திருந்தார்.