News August 23, 2025
ராகுல் காந்தி நடைபயணத்தில் CM ஸ்டாலின்

பாஜக, ECI-யை வைத்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு எதிராக ராகுல் காந்தி பிஹாரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.27-ல் இந்த பயணத்தில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்தவாறே அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News March 28, 2026
வரலாற்றில் இன்று

➤1737 – மராட்டிய பேரரசுக்கும் முகலாய பேரரசுக்கும் இடையே முதல் டெல்லி போர் நடைபெற்றது. ➤1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்ஸை சேர்ந்த ஹென்றி ஃபேப்ரே படைத்தார். ➤2005 – இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1000 பேர் வரை உயிரிழந்தனர். ➤1982 – நடிகை சோனியா அகர்வால் பிறந்த தினம். ➤2006 – வேதாத்திரி மகரிஷி மறைந்த நாள்.
News March 28, 2026
CINEMA 360°: SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ்?

▶ SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
▶ ‘தி டார்ம்’ படத்தில் முனிஷ்கான் கதை நாயகனாக களமிறங்குகிறார்.
▶ ‘யூத்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ₹28 கோடி வசூல் செய்துள்ளதாம்.
▶ தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
News March 28, 2026
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரானின் அராக் கனநீர் அணு உலை மற்றும் அர்தகான் யுரேனியம் ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான முக்கிய உள்கட்டமைப்புகளை அழிப்பதே இதன் நோக்கம் என்று இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது கதிர்வீச்சு அபாயங்களோ இல்லை என்று ஈரான் தெரிவித்த ஈரான், இதற்கு பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.


