News October 28, 2025
நேற்று விஜய் சென்ற ரிசார்ட்டில் இன்று CM ஸ்டாலின்!

2026 தேர்தலுக்காக திமுக பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் பயிற்சி வழங்குகிறார். இதில், MP, MLA, மாவட்ட செயலாளர்கள், கிளை செயலாளர் என சுமார் 3,000 பேர் பங்கேற்றுள்ளனர். கரூர் மக்களை நேற்று விஜய் சந்தித்த அதே மாமல்லபுரம் ரிசார்ட்டில்தான் திமுகவின் இக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது.
Similar News
News October 28, 2025
மன ஆரோக்கியம் பெற சில டிப்ஸ்

நமது தினசரி பழக்கவழக்கங்கள் மூலம் மனதை தெளிவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். கவனச் சிதறல்களை கட்டுப்படுத்தி, மன தெளிவை அதிகரிப்பது, அன்றாடம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு என்னென்ன பழக்கங்களை கடைப்பிடிக்கலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த டிப்ஸை, கமெண்ட்ல சொல்லுங்க.
News October 28, 2025
மகளிருக்கு ₹2,500 உரிமை தொகை.. குட் நியூஸ்

பிஹாரில் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பழைய ஓய்வூதிய திட்டம், வீட்டிற்கு ஒரு அரசு வேலை, ஒவ்வொருவருக்கும் ₹25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகளிர் உரிமை தொகை உயர்த்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
News October 28, 2025
சற்றுமுன்: பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை

ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். அதன்படி, நவ.1-ம் தேதி அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேவர் ஜெயந்தியையொட்டி அக்.30-ல் சிவகங்கை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


