News April 15, 2025

பேரவையில் நயினாரை வாழ்த்திய CM ஸ்டாலின்!

image

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு பெற்றதற்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக பேரவையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு அவரும் நன்றி கூறினார்.

Similar News

News January 16, 2026

நாமக்கல் மக்களே நாளையே கடைசி தேதி!

image

எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் namakkal.nic.in என்ற இணையதளத்தில் ஜனவரி 15 காலை 8 மணி முதல் 17-ம் தேதி காலை 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News January 16, 2026

திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும்: EPS

image

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கம் மூலம் திமுகவுக்கு காங்., கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., கை நழுவி வெளியே போகப் போகிறது என்றும், இதனால், இண்டியா கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் EPS கூறியுள்ளார். மேலும், திமுகவை எப்பொழுது ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

News January 16, 2026

BREAKING: இன்று கிடையாது.. தமிழக அரசு அறிவித்தது

image

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று(ஜன.16) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம், அனைத்து மதுபானக் கடைகளில் சில்லறை விற்பனை, அதனுடன் இணைந்த பார்களில் விற்பனை நடைபெறாது. அதனை மீறி விற்பனை நடந்தாலோ, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!