News April 26, 2025
கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

இஸ்ரோ Ex தலைவர் <<16213450>>கஸ்தூரி ரங்கன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விண்வெளி துறையில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார். விஞ்ஞானியாக மட்டுமின்றி திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை அவர் வகித்துள்ளதாக தெரிவித்த CM ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 20, 2026
சுயமரியாதையை சீண்டினால்: கவர்னருக்கு CM பதில்

கவர்னருக்கும் தனக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவையில் இறுதிநாளில் பேசிய அவர், தங்களுடைய சுயமரியாதை எள்முனை அளவு சீண்டப்பட்டால் கூட, அது யாராக இருந்தாலும் எதிர்குரல் கொடுக்கும் திசையில் முதல் நபராக நான் இருப்பேன் எனவும் பேசியுள்ளார். மேலும், எது இருந்தாலும் தமிழர் பண்பாட்டை மனதில் கொண்டு அவருக்கும் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
FLASH: விலை 27,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

உங்கள் கனவு பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால் இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், Kawasaki நிறுவனம், குறைந்தபட்சம் ₹20,000 முதல் ₹2.50 லட்சம் வரை பைக்குகளின் விலையை குறைத்துள்ளது. இது பிப்ரவரி இறுதி வரையே வழங்கப்படும். எனவே, அவை எந்தெந்த பைக்குகள், அவற்றின் விலை என்ன என்று மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள்.
News February 20, 2026
ராமதாஸுக்கு பின்னடைவு

மாம்பழ சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை HC தள்ளுபடி செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு HC-யிலும் வழக்கு தாக்கல் செய்வதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


