News September 7, 2025
குறளிசைக் காவியம் படைத்த லிடியனுக்கு CM பாராட்டு

திருக்குறளை அனைவரும் உள்வாங்கும் வகையில் இசை வடிவில் லிடியன் நாதஸ்வரமும், அமிர்தவர்ஷினியும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த அற்புதமான படைப்பை CM ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, திருக்குறளை அனைவரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இருவரையும் வாழ்த்துவதாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலை நீங்கள் Spotify-ல் கேட்கலாம்…
Similar News
News September 8, 2025
EXCLUSIVE: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய அடுத்த கட்சி

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற EPS-ன் பேச்சுக்கு ஜான் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து கொண்டே <<17642038>>EPS-க்கு கண்டனம்<<>> தெரிவித்தது பேசுபொருளானது. இது தொடர்பாக ஜான் பாண்டியனிடம் பேசியபோது, கூட்டணி குறித்து 3 மாதங்களுக்கு பிறகே இறுதி முடிவு எடுப்போம் என்றார். இதனால், TTV, OPS-ஐ தொடர்ந்து TMMK-வும் தற்போது அந்த கூட்டணியில் இல்லை.
News September 8, 2025
இளையராஜா பாடலை குட் பேட் அக்லியில் பயன்படுத்த தடை

அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த சென்னை HC இடைக்கால தடை விதித்துள்ளது. ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாய் தாரேன்’ உள்ளிட்ட பாடல்களை, அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா HC-ல் வழக்குத் தொடர்ந்தார். காப்புரிமை சட்டத்தின்படி, அந்த பாடல்களை பயன்படுத்த தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
தவெக தலைவர் விஜய்க்கு EPS பதிலடி

வரும் தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியதற்கு, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என EPS பதிலளித்துள்ளார். தமிழகத்தில் 2 கட்சிகள் தான் பெரிய கட்சிகள் என கூறிய அவர், அது எந்த கட்சி என மக்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளை வெல்லும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.