News August 25, 2024

முதல்வர் கோப்பை SPORTS: அவகாசம் நீட்டிப்பு

image

முதல்-அமைச்சர் கோப்பை-2024 விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க, செப்.2 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த டிராபியில் கபடி, சிலம்பம் என 15 வகையான போட்டிகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இந்த<<>> இணையதளம் / 9514000777 என்ற எண்ணில் அழைக்கவும்.

Similar News

News August 26, 2025

கேப்டன்சி வாய்ப்பை நழுவ விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்

image

ஆசிய கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணியின் பேப்டன்சி வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் நிராகரித்தாக கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் வாய்ப்பை ஏற்காததால் அந்த வாய்ப்பு ஷர்துல் தாக்கூருக்கு சென்றது. ஆசிய கோப்பை கனவு தகர்ந்ததால் இப்போது சாதரண வீரராக துலீப் டிராபியில் அவர் விளையாட உள்ளார். போராட்ட குணம் கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் டி20 அணியில் நிச்சயம் இணைவார் என நம்பலாம்.

News August 26, 2025

சனாதன தர்மத்தை அழிக்க முடியாது: வானதி சீனிவாசன்

image

சனாதன தர்மத்தை எந்த அரசியல் தலைவர்களும் அழிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமர் குறித்து வன்னி அரசு பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும் எனவும் வானதி பதிலடி கொடுத்துள்ளார். கட்டுக்கதைகளை வைத்து பேசுவது சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

News August 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 439 ▶குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
▶ பொருள்: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.

error: Content is protected !!