News September 3, 2025

15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என CM நம்பிக்கை

image

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஐரோப்பிய பயணம் துணை நிற்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும், ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். 26 நிறுவனங்களுடன் ₹15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் X தள பதிவில் பகிர்ந்துள்ளார்.

Similar News

News March 10, 2026

ஈரான் போரால் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்

image

போர் காரணமாக அடுத்த 72 மணி நேரத்திற்குள் நாட்டின் முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. வீட்டு LPG சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வணிக சிலிண்டர்களின் விநியோகம் தடைபட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்று பெங்களூரு ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் LPG விநியோகம் சீராவதை உறுதி செய்யுமாறு PM-க்கு சென்னை ஹோட்டல் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

News March 10, 2026

நண்பன் ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு: ரஷ்யா

image

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரில் ஈரானுக்கு வெளிப்படையான ஆதரவை ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உயர் தலைவர் <<19341792>>மொஜ்தபா கமேனியின் நியமனத்திற்கு டிரம்ப் எதிர்ப்பு<<>> தெரிவித்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நட்பு நாடான ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த விரும்புவதாகவும், என்ன ஆனாலும் தங்களது ஆதரவு தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

News March 10, 2026

இந்த கணக்குகளில் 0 பேலன்ஸ் இருந்தாலும் அபராதம் இல்லை!

image

PMJDY உள்பட 72 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கணக்குகளைப் பராமரிக்காததற்கு அபராதம் விதிக்கப்படாது, மேலும் வைப்புத்தொகை, பணம் எடுப்பது மற்றும் ஏடிஎம் சேவைகளுக்கும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது; வங்கிச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!