News October 16, 2025

விஜய்யை அட்டாக் செய்யும் CM; பின்னணி இதுவா?

image

கரூர் துயரத்திற்கு விஜய்யை நேரடியாக குறிப்பிடாத CM தற்போது, இதற்கு காரணம் TVK-ன் <<18010842>>காலதாமதம்தான்<<>> என பேசியுள்ளார். இந்த திடீர் ரியாக்‌ஷனுக்கு திமுகவின் சர்வேதான் காரணம் என்கின்றனர். சர்வேயில் NDA கூட்டணிக்கு விஜய் சென்றால் <<18018325>>திமுக வெற்றி உறுதி<<>> என தெரியவந்துள்ளது. இதனால், தொடர்ந்து அட்டாக் செய்தால், விஜய் NDA பக்கம் சாய்வார் என அறிவாலயம் கணக்கு போட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News October 16, 2025

திருப்பூரில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

image

திருப்பூர் மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News October 16, 2025

மலேசியாவில் மர்ம காய்ச்சல்: மீண்டும் Pandemic?

image

மலேசியாவில் 6,000 மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் Pandemic அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே மலேசியாவில் XFG என்ற புதிய வகை கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது கூடுதல் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மலேசியா முழுவதும் பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

News October 16, 2025

காலமானார் யோகலட்சுமி .. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

image

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மனைவி யோகலட்சுமி காலமானார். கடந்த சில நாளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. தேனாம்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!