News October 24, 2024
பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்த CM

முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய பின் பேசிய CM ஸ்டாலின், தமிழக விளையாட்டு துறை உலகத்தையே ஈர்த்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். விளையாட்டு மன வலிமையை, உடல் வலிமையை தரக்கூடியது. எனவே, குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழகத்தில் விளையாட்டு துறையும், அமைச்சரும் வளர்ந்துள்ளதாகவும் உதயநிதியை பாராட்டினார்.
Similar News
News November 27, 2025
சிவகாசி அருகே வீட்டில் பீரோவை உடைத்து நகை கொள்ளை

சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் அழகர் 50. ஆடு, கோழிகள் வளர்த்து கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்த முத்துலட்சுமி 45, வேலை செய்து வந்தார்.இந்நிலையில் அழகர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது முத்துலட்சுமி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 3 பவுன் தங்கச் செயின், நான்கரை பவுன் கம்மலை திருடினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 27, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.
News November 27, 2025
ஆஸ்கர் போட்டியில் ‘மகாவதார் நரசிம்மா’

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.


