News February 22, 2026

CM ஸ்டாலின் Lion இல்ல.. லையர்: தமிழிசை

image

ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் தானே லயன் என சொல்லும் CM உண்மையில் லயன் கிடையாது லையர்(Liar-பொய்யர்) என தமிழிசை விமர்சித்துள்ளார். CM நிறைய பொய் சொல்வதாக சாடிய அவர், மத்திய அரசு உதவாமல் எப்படி TN முன்னுக்கு வர முடியும் என கேட்டுள்ளார். மேலும், அமைச்சர் நேரு மீது நடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் இருப்பதாகவும், குற்றங்களை செய்துவிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என கூறுவது வழக்கமாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 25, 2026

நல்லகண்ணு மறைந்தார்.. மருத்துவமனை அறிக்கை

image

மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், அனைத்து உடலுறுப்புகளும் செயல் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.55 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

News February 25, 2026

வெரைட்டி வெரைட்டியா வடை சுடும் EPS: CM ஸ்டாலின்

image

₹15 லட்சம் தருவேன் என ஒரு காலத்தில் PM மோடி வடை சுட்டதை போல, தற்போது EPS வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார் என அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மீனவர்கள் கைதுக்கு எப்போது விடிவுகாலம் வரும், வெளியுறவுத் துறை யார் கண்ட்ரோலில் உள்ளது என கேட்ட அவர், PM மோடி இதற்கெல்லாம் பதில் சொல்வாரா என கேட்டுள்ளார். மேலும், பாஜகவுக்கு கிடைத்த சரியான ஆள் தான் EPS எனவும் பேசியுள்ளார்.

News February 25, 2026

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த நல்லகண்ணு!

image

சுதந்திர போராட்டத்தோடு ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமைக்கான போராட்டங்களை தமிழகம் முழுவதும் முன்னெடுத்தவர். நாங்குநேரியில் கோயில் நுழைவு போராட்டத்தை நல்லகண்ணு முன்னின்று நடத்தினார். குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறான கடனா ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். TN அரசு கட்டிய அணையால் இன்று அப்பகுதி விவசாயத்தில் செழித்து காணப்படுகிறது.

error: Content is protected !!