News January 17, 2026

CM ஸ்டாலின் வேங்கைவயலுக்கு செல்லாதது ஏன்?

image

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்த வேங்கைவயலுக்கு CM ஸ்டாலின் செல்லாதது குறித்து ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனிமனிதனால் நிகழ்த்தப்பட்ட இந்த அநாகரிகத்துக்கு விசாரணை மட்டுமே ஒரே தீர்வு என கூறியுள்ளார். நிலச்சரிவு, பேரிடர் என்றால் CM நேரில் செல்லலாம், ஆனால் இந்த விவகாரத்தை அவர் கோட்டையில் இருந்தே (தலைமைச் செயலகம்) பார்க்கிறார் என தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News January 30, 2026

ராசி பலன்கள் (30.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 30, 2026

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் ரிக்டர் அளவுகோலில் 3-ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், அதன் தாக்கம் சுமார் 20 கிமீ வரை உணரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், செங்குளம், பாட்டாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் சாலையில் தஞ்சம் புகுந்தனர்

News January 29, 2026

Best Actress Award: நயன் முதல் சாய் பல்லவி வரை

image

2016 – 2022-ம் ஆண்டு வரைக்குமான சிறந்த நடிகைகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாம்பு சட்டை (2016) – கீர்த்தி சுரேஷ், அறம் (2017)- நயன்தாரா, செக்கச் சிவந்த வானம் (2018)- ஜோதிகா, அசுரன் (2019) – மஞ்சு வாரியர், சூரரைப் போற்று (2020) – அபர்ணா பாலமுரளி, ஜெய் பீம் (2021) – லிஜோமோல் ஜோஸ், கார்கி (2022)- சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

error: Content is protected !!