News February 8, 2026
CM ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளை கூட செய்ய முடியாத கையாலாகாத நிலையில் திமுக அரசு உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். <<19082017>>TNPSC Group 2<<>> ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு அரசு பணி வழங்கும் திமுக அமைச்சர்களால் இம்முறைகேடு நடத்தப்பட்டதா என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்த தவறுக்காக CM, இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 15, 2026
விஜய்யை ஒரு பொருட்டாவே நினைக்கல: RS பாரதி

திமுக மக்களை நம்பி இருக்கிறது, மக்கள் எங்களை நம்பியிருக்கிறார்கள் என RS பாரதி கூறியுள்ளார். விஜய்யை தாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்ற அவர், விசிலுக்கு நீண்ட ஆயுள் கிடையாது, மூச்சிருக்கும் வரை மட்டுமே ஊத முடியும் என விமர்சித்துள்ளார். மேலும், பிஹார் தேர்தலின்போது, நிதிஷ்குமாருக்கு மோடி பல கோடிகளை கொடுத்தார். அப்படி எங்களுக்கு கொடுத்தாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 15, 2026
கலப்பட இலவங்கப்பட்டையை கண்டுபிடிப்பது ஈஸி!

ஞாயிற்றுக்கிழமையில் பலரும் பிரியாணி, சிக்கன் குழம்பு என சமைப்பதுண்டு. ஆனால் அதில் பயன்படுத்தப்படும் இலவங்கபட்டையில் கூட கலப்படம் வந்துவிட்டது என்பதை பலபேர் அறிவதில்லை. எனினும் அதனை கண்டுபிடிப்பது எளிது. ஒரிஜினல் இலவங்கப்பட்டை மெலிதாக, நிறைய அடுக்குகளுடன் ஒரு தனித்துவமான வாசனையும் வரும். ஆனால் கலப்பட பட்டை தடிமனாக, ஒரே ஒரு சுருளாக மட்டும் தான் இருக்கும். டெஸ்ட் பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்க!
News February 15, 2026
திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி

OPS அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி திமுகவில் இணைந்தார். அவருடன் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது OPS-க்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கெனவே OPS அணியிலிருந்து EX அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் திமுக, அதிமுக, தவெகவில் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர்.


