News March 21, 2026
CM ஸ்டாலின் செயலிழந்து விட்டார்: எல்.முருகன்

TN-ல் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக எல்.முருகன் கூறியுள்ளார். போலீஸை கட்டுப்பாட்டில் வைத்துள்ள CM ஸ்டாலின் செயலிழந்துவிட்டதாகவும், தனக்கு கீழ் இயங்கும் துறையில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். 5 வருட திமுக ஆட்சியில் கஞ்சா புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதால் சொல்லி மாளாத துயரத்தை மக்கள் அனுபவிப்பதாகவும் கூறினார்.
Similar News
News April 5, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

தோளில் புத்தகப் பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்! பல்லடம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு தான் இந்த கொடுமை நேர்ந்துள்ளது. ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை சக்திவேல்(22) என்ற பொக்லைன் டிரைவர் கர்ப்பமாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News April 5, 2026
சீமானுக்கு கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்த மக்கள்

சீமானின் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் பலரும் தாங்களாகவே முன்வந்து நிதி கொடுப்பது தேர்தல் களத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான், நோட்ட கொடுத்தா வோட்டு போடுற கூட்டத்துல, நோட்ட கொடுத்து வோட்டு போடுற கூட்டம் என் மக்கள் என தெரிவித்துள்ளார். இந்த அரசியல் களத்தில் தான் பெற்ற பேரன்பு இதுவெனவும் அவர் கூறியுள்ளார்.
News April 5, 2026
IPL TOSS: சென்னை அணி பவுலிங்

RCB-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற CSK பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் ராகுல் சாஹருக்கு பதில் இன்று ஓவர்டன் களமிறங்கியுள்ளார். CSK முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் RCB 6 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


