News February 16, 2026
CM ஸ்டாலின் அமைதிகாப்பது பெருங்கொடுமை: சீமான்

இலங்கையில் விடுதலையாகி வதைபடும் 9 பேர் உள்பட 11 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். விடுதலை செய்யப்பட்ட TN மீனவர்களை இந்தியாவிற்கு மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வதைபட விடுவது பேரவலம் என்றும், மீனவர்களை விடுவிக்க வழக்கம்போல மத்திய அரசிற்கு கடிதம் மட்டும் எழுதி CM அமைதிகாப்பது மற்றுமொரு பெருங்கொடுமை எனவும் சாடியுள்ளார்.
Similar News
News February 17, 2026
DMK அரசுக்கு எதிராக பிப்.21-ல் BJP போராட்டம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாக நயினார் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர்களை அழிக்கும் போதைப்பொருள் கும்பல்களை தடுக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த அவர், போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கொள்கைகளை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் பிப்.21-ல் TN முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
News February 17, 2026
டிகிரி போதும்.. ₹48,480 வரை சம்பளம்!

SBI வங்கியில் 2,050 Circle Based Officers (CBO) காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: Engineering, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு * பிப்.25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News February 17, 2026
சாதனைகளின் தொகுப்பே இடைக்கால பட்ஜெட்: CM

‘இதுதான் வளர்ச்சி! TN தான் இந்தியாவுக்கான மாடல்’ என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம் என்றும், வரும் ஜூலையில் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் எனவும் கூறியுள்ளார்.


