News January 24, 2026
CM-ஆன போது கவலையாக இருந்தேன்: ஸ்டாலின்

ஆட்சியின் தொடக்கத்தில் கவலையில் இருந்ததாக CM ஸ்டாலின் பேரவையில் கூறியுள்ளார். முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் TN-க்கு எதுவும் செய்யவில்லை, இன்னொரு பக்கம் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்ததாக கூறிய அவர், இந்த 2 நெருக்கடிகளையும் எதிர்கொள்வதுதான் கவலைக்கு காரணம் என்றார். ஆனால் 5 ஆண்டுகள் கழித்து தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த ஆட்சியில் மக்களும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 14, 2026
எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுக ஆட்சிக்கு வராது: வானதி

அண்ணா பல்கலை., முதல் அரசுப் பள்ளிகள் வரை திமுக உடன்பிறப்புகள் பெண்கள் மீது நடத்திய பாலியல் வேட்டைகளின் சுவடுகளை வெறும் ₹5000 பண நோட்டுகளால் மூடி மறைத்து விடலாம் என நினைப்பது பெரிய முட்டாள்தனம் என வானதி சாடியுள்ளார். திமுக அரசு கொடுக்கும் பணத்தை தமிழக மகளிர் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். ஆனால், உங்களைப் போன்ற ஒரு தீயசக்தியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.
News February 14, 2026
₹5,000 + ₹3,000 + ₹1,000.. தமிழக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி

பொங்கலுக்கு TN அரசு ரொக்கமாக ₹3,000 வழங்கியிருந்தது. அதோடு, ஜன.15-க்கு பதிலாக முன்கூட்டியே மகளிரின் வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்பட்டது. தற்போது, தேர்தல் நெருங்குவதால் முன்கூட்டியே 3 மாத உரிமைத் தொகை ₹3,000 & கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ₹2,000 சேர்த்து ₹5,000 நேற்று கிரெடிட் ஆனது. கடந்த 30 நாள்களுக்குள் பெண்களுக்கு ₹9,000 திமுக அரசு வழங்கியது வாக்கு அரசியல் என விமர்சனம் எழுந்துள்ளது.
News February 14, 2026
மீண்டும் சசிதரூருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த காங்.,

PM மோடியின் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டி வந்ததால் சசிதரூர் MP-க்கும், காங்., தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால், அவர் பாஜகவில் இணைவார் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் ராகுலை சந்தித்து சமரசம் செய்தார். இந்நிலையில், கேரளாவிற்கும் விரைவில் பேரவைத் தேர்தல் வரவிருப்பதால், பிரசார குழுவின் இணை தலைவராக சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினர் மத்தியிலேயே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


